பயனர் விவரங்களைப் பெறுவதற்கான அரசின் கோரிக்கைகளை Google எவ்வாறு கையாள்கிறது?
உலகம் முழுவதும் உள்ள அரசாங்க ஏஜென்சிகள் பயனர் விவரங்களை வெளியிடுமாறு Googleளிடம் கேட்கின்றன. ஒவ்வொரு கோரிக்கையும் பொருந்தக்கூடிய சட்டங்களுடன் இணங்குகிறதா என்பதை நாங்கள் கவனமாக மதிப்பாய்வு செய்வோம். ஒரு கோரிக்கை அதிகப்படியான விவரங்களைக் கோருகிறது எனில், நாங்கள் அதைக் குறைக்க முயற்சிப்பதுடன் சில சமயங்களில் விவரங்கள் எதையும் வழங்குவதற்கு எதிர்ப்பும் தெரிப்போம். நாங்கள் பெறும் கோரிக்கைகளின் எண்ணிக்கை மற்றும் வகை பற்றிய தகவலை எங்கள் வெளிப்படைத்தன்மை அறிக்கையில் வழங்குவோம்.
அமெரிக்கச் சட்டத்தின்கீழ் இயங்கும் Google LLC என்ற அமெரிக்க நிறுவனமாக இருந்தாலும் ஐரிஷ் சட்டத்தின்கீழ் இயங்கும் Google Ireland Limited என்ற ஐரிஷ் நிறுவனமாக இருந்தாலும், எங்களின் பெரும்பாலான சேவைகளை வழங்கும் உங்கள் Google சேவை வழங்குநரைப் பொறுத்தே உங்கள் கோரிக்கைகளுக்கு நாங்கள் பதிலளிக்கிறோம். உங்கள் சேவை வழங்குநரைக் கண்டறிய, Googleளின் சேவை விதிமுறைகளை மதிப்பாய்வு செய்யவும் அல்லது உங்கள் Google கணக்கை ஒரு நிறுவனம் நிர்வகிக்கிறது எனில் உங்கள் கணக்கு நிர்வாகியைத் தொடர்புகொள்ளவும்.
பயனர் விவரங்களைப் பெறுவதற்கான கோரிக்கைகள் குறித்து பயனர்களுக்கு அறிவித்தல்
அரசாங்க ஏஜென்சியிடமிருந்து நாங்கள் கோரிக்கையைப் பெறும்போது, தகவலை வெளியிடுவதற்கு முன்பு பயனர் கணக்கிற்கு ஒரு மின்னஞ்சலை அனுப்புவோம். கணக்கானது ஒரு நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுகிறது எனில், கணக்கின் நிர்வாகிக்கு நாங்கள் அறிவிப்பை வழங்குவோம்.
கோரிக்கை விதிகளின் கீழ் சட்டப்படி தடைசெய்யப்பட்டிருக்கும்போது அறிவிப்பை வழங்க மாட்டோம். சட்டப்படியான அல்லது நீதிமன்ற உத்தரவின்படியான தடைக்காலம் காலாவதியாகியிருப்பது போன்ற சமயங்களில் சட்டப்படியான தடை விலக்கிக்கொள்ளப்பட்ட பிறகு அறிவிப்பை வழங்குவோம்.
கணக்கு முடக்கப்பட்டிருந்தாலோ ஹைஜேக் செய்யப்பட்டிருந்தாலோ நாங்கள் அதுபற்றிய அறிவிப்பை வழங்காமல் போகக்கூடும். அதோடு பிள்ளையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்கள் ஏற்படுவது அல்லது யாரோ ஒருவரின் உயிருக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் ஏற்படுவது போன்ற அவசரநிலைகளில் எங்களால் அதுபற்றிய அறிவிப்பை வழங்க முடியாமல் போகக்கூடும், இந்தச் சூழ்நிலையில் அவசரநிலையைக் கடந்துவிட்டது என்று அறிந்துகொண்டால் அறிவிப்பை வழங்கிவிடுவோம்.
தகவலுக்காக Google LLCயிடம் வைக்கப்படும் கோரிக்கைகள்
உரிமையியல், நிர்வாகம் மற்றும் குற்றவியல் வழக்குகளில் அமெரிக்க அரசாங்க ஏஜென்சிகளிடமிருந்து பெறப்படும் கோரிக்கைகள்
அமெரிக்க சட்டத்தின் நான்காவது திருத்தமும் மின்னணுத் தகவல்தொடர்புகள் தனியுரிமைச் சட்டமும் (Electronic Communications Privacy Act - ECPA) பயனர் விவரங்களை சேவை வழங்குநர் கட்டாயம் வழங்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டைக் கட்டுப்படுத்துகிறது. அமெரிக்க அதிகாரிகள் குறைந்தபட்சம் பின்வருவனவற்றைச் செய்ய வேண்டும்:
- அனைத்து வழக்குகளிலும்: அடிப்படை சந்தாதாரர் பதிவுத் தகவலையும் குறிப்பிட்ட IP முகவரிகளையும் கட்டாயம் வெளியிட கோர்ட் மூலமான சம்மனை வழங்க வேண்டும்
- குற்றவியல் வழக்குகளில்:
- மின்னஞ்சல்களில் உள்ள பெறுநர், அனுப்புநர், CC, BCC, நேரமுத்திரை போன்ற உள்ளடக்கமற்ற புலங்களின் பதிவுகளைக் கட்டாயமாக வெளியிட நீதிமன்ற உத்தரவைப் பெற வேண்டும்.
- மின்னஞ்சல் செய்திகள், ஆவணங்கள், படங்கள் போன்ற தகவல்தொடர்புகளுக்கான உள்ளடக்கத்தை நாங்கள் கட்டாயம் வெளியிட வேண்டும் எனில், நீதித்துறை மூலம் தேடுதல் ஆணையைப் பெற வேண்டும்
தேசியப் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளில் அமெரிக்க அரசாங்க ஏஜென்சிகளிடமிருந்து பெறப்படும் கோரிக்கைகள்
தேசியப் பாதுகாப்பு தொடர்பான விசாரணைகளில், பயனர் விவரங்களை Google கட்டாயம் வழங்க வேண்டும் என்ற நிலையில், அமெரிக்க அரசாங்கம் தேசியப் பாதுகாப்புக் கடிதம் (National Security Letter - NSL) ஒன்றின் மூலமோ வெளிநாட்டுப் புலனாய்வுக் கண்காணிப்பு சட்டத்தின் (Foreign Intelligence Surveillance Act - FISA) கீழ் அங்கீகாரம் பெற்றுள்ள அதிகாரிகள் மூலமோ அவற்றைப் பெற வேண்டும்.
- தேசியப் பாதுகாப்புக் கடிதத்திற்கு (NSL) நீதித்துறையின் அங்கீகாரம் தேவையில்லை. எனினும் வரம்பிற்குட்பட்ட சந்தாதாரர் விவரங்களை வழங்குவதற்கு எங்களைக் கட்டாயப்படுத்த மட்டுமே அதைப் பயன்படுத்த முடியும்.
- Gmail, Drive, Photos போன்ற சேவைகளின் மூலம் பெறப்பட்ட உள்ளடக்கம் உட்பட, மின்னணுக் கண்காணிப்பு தொடர்பான தகவல்களையும் சேமிக்கப்பட்ட தரவையும் Google கட்டாயம் வெளியிட வேண்டும் என்ற நிலையில், வெளிநாட்டுப் புலனாய்வுக் கண்காணிப்பு சட்டத்தின் (FISA) மூலம் பெறப்பட்ட ஆணைகளையும் அங்கீகாரங்களையும் அமெரிக்க அதிகாரிகள் பயன்படுத்தலாம்.
அமெரிக்காவிற்கு வெளியே உள்ள அரசாங்க அதிகாரிகளிடமிருந்து பெறப்படும் கோரிக்கைகள்
Google LLC சில நேரங்களில் அமெரிக்காவிற்கு வெளியே உள்ள அரசாங்க அதிகாரிகளிடமிருந்து பயனர் தரவை வெளியிடுவதற்கான கோரிக்கைகளைப் பெறுகிறது. இந்தவிதமான கோரிக்கைகளில் ஒன்றை நாங்கள் பெறும்போது அது கீழே கூறப்பட்டுள்ள அனைத்து நிபந்தனைகளுடனும் இணங்கினால் பயனர் விவரங்களை நாங்கள் வழங்கக்கூடும்:
- அமெரிக்க சட்டத்திற்கு இணங்குதல் இதன் அர்த்தம் என்னவெனில், மின்னணுத் தகவல்தொடர்புகள் தனியுரிமைச் சட்டம் (Electronic Communications Privacy Act - ECPA) போன்ற பொருந்தக்கூடிய அமெரிக்க சட்டத்தின்படி தரவை அணுகவும் வெளியிடவும் அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதாகும்
- விவரங்களைக் கோரும் நாட்டின் சட்டத்திற்கு இணங்குதல் இதன் அர்த்தம் என்னவெனில், விவரங்களைப் பெறுவதற்கான கோரிக்கையானது மேலே குறிப்பிடப்பட்ட சேவைகளுக்கு இணையானவற்றை வழங்கும் எங்களின் உள்ளூர் வழங்குநரிடம் வைக்கப்பட்டால், அதைத் தொடர்ந்து வரும் செயல்முறைகளையும் சட்டத் தேவைகளையும் உள்ளூர் அதிகாரி பின்பற்ற வேண்டியது அவசியம் என்பதாகும்
- சர்வதேச விதிமுறைகளுக்கு இணங்குதல் இதன் அர்த்தம் என்னவெனில், Global Network Initiative அமைப்பினால் வழங்கப்பட்டுள்ள கருத்துச் சுதந்திரம் மற்றும் தனியுரிமை பற்றிய கோட்பாடுகளையும் அதனுடன் தொடர்புடைய நடைமுறைப்படுத்தலுக்கான வழிகாட்டுதல்களையும் பூர்த்தி செய்யும் கோரிக்கைகளுக்கு மட்டுமே நாங்கள் தரவை வழங்குகிறோம் என்பதாகும்
- Googleளின் கொள்கைகளுக்கு இணங்குதல் பொருந்தக்கூடிய Googleளின் சேவை விதிமுறைகள், தனியுரிமைக் கொள்கைகள் ஆகியவற்றுக்கும், கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாப்பது தொடர்பான Googleளின் கொள்கைகளுக்கும் பயனர் விவரங்களைப் பெறுவதற்கான கோரிக்கை இணங்க வேண்டும்
Google Ireland Limited நிறுவனத்திடம் வைக்கப்படும் பயனர் விவரங்களைப் பெறுவதற்கான கோரிக்கைகள் (உங்களின் Google சேவை வழங்குநர் Google Ireland Limited நிறுவனமாக இருந்தால்)
ஐரோப்பிய பொருளாதாரப் பகுதியிலும் சுவிட்சர்லாந்திலும் Googleளின் பெரும்பாலான சேவைகளை வழங்க Google Ireland பொறுப்பேற்றுள்ளதால், பயனர் விவரங்களைப் பெறுவதற்கான கோரிக்கைகளையும் இந்த நிறுவனமே பெறுகிறது.
ஐரிஷ் அரசாங்க ஏஜென்சிகளிடமிருந்து பெறப்படும் கோரிக்கைகள்
ஐரிஷ் அரசாங்க ஏஜென்சி மூலம் வரும் பயனர் விவரங்களைப் பெறுவதற்கான கோரிக்கைகளை மதிப்பிடும்போது, Google Ireland நிறுவனம் ஐரிஷ் சட்டத்தையே அதற்கு அடிப்படையாகக் கொள்கிறது. பயனர் விவரங்களைக் கட்டாயம் வழங்குமாறு Google Ireland நிறுவனத்திடம் கோரவேண்டும் எனில், ஐரிஷ் சட்ட அமலாக்க அதிகாரிகள், நீதித்துறையால் அங்கீகரிக்கப்பட்ட ஆணையைப் பெற வேண்டும் என ஐரிஷ் சட்டம் குறிப்பிடுகிறது.
அயர்லாந்திற்கு வெளியே உள்ள அரசாங்க அதிகாரிகளிடமிருந்து பெறப்படும் கோரிக்கைகள்
Google Ireland நிறுவனம், ஐரோப்பிய பொருளாதாரப் பகுதி (European Economic Area) மற்றும் சுவிட்சர்லாந்து முழுவதும் உள்ள பயனர்களுக்கு சேவைகளை வழங்குவதால், சில நேரங்களில் அயர்லாந்திற்கு வெளியே உள்ள அரசாங்க அதிகாரிகளிடமிருந்து தரவை வெளியிடுதலுக்கான கோரிக்கைகளை நாங்கள் பெறுகிறோம். இத்தைகைய கோரிக்கைகளைப் பெறும்போது அவை கீழே கூறப்பட்டுள்ள அனைத்து நிபந்தனைகளுடனும் இணங்கினால் பயனர் தரவை நாங்கள் வழங்கக்கூடும்:
- ஐரிஷ் சட்டம் இதன் அர்த்தம் என்னவெனில், ஐரிஷ் குற்றவியல் நீதிச் சட்டம் போன்ற பொருந்தக்கூடிய ஐரிஷ் சட்டத்தில், தரவை அணுகவும் வெளியிடவும் அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதாகும்.
- அயர்லாந்தில் பொருந்தக்கூடிய ஐரோப்பிய ஒன்றிய (EU) சட்டம் இதன் அர்த்தம் என்னவெனில், பொதுவான தரவுப் பாதுகாப்பு ஒழுங்குமுறை (General Data Protection Regulation - GDPR) உட்பட அயர்லாந்தில் பொருந்தக்கூடிய எந்தவொரு ஐரோப்பிய ஒன்றிய சட்டங்களுக்கு தரவைப் பெறுவதற்கான கோரிக்கைகள் இணங்க வேண்டும் என்பதாகும்
- விவரங்களைக் கோரும் நாட்டின் சட்டத்திற்கு இணங்குதல் இதன் அர்த்தம் என்னவெனில், விவரங்களைப் பெறுவதற்கான கோரிக்கையானது மேலே குறிப்பிடப்பட்ட சேவைகளுக்கு இணையானவற்றை வழங்கும் எங்களின் உள்ளூர் வழங்குநரிடம் வைக்கப்பட்டால், அதைத் தொடர்ந்து வரும் செயல்முறைகளையும் சட்டத் தேவைகளையும் உள்ளூர் அதிகாரி பின்பற்ற வேண்டியது அவசியம் என்பதாகும்
- சர்வதேச விதிமுறைகளுக்கு இணங்குதல் இதன் அர்த்தம் என்னவெனில், Global Network Initiative அமைப்பினால் வழங்கப்பட்டுள்ள கருத்துச் சுதந்திரம் மற்றும் தனியுரிமை பற்றிய கோட்பாடுகளையும் அதனுடன் தொடர்புடைய நடைமுறைப்படுத்தலுக்கான வழிகாட்டுதல்களையும் பூர்த்தி செய்யும் கோரிக்கைகளுக்கு மட்டுமே நாங்கள் தரவை வழங்குகிறோம் என்பதாகும்
- Googleளின் கொள்கைகளுக்கு இணங்குதல் பொருந்தக்கூடிய Googleளின் சேவை விதிமுறைகள், தனியுரிமைக் கொள்கைகள் ஆகியவற்றுக்கும், கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாப்பது தொடர்பான Googleளின் கொள்கைகளுக்கும் பயனர் விவரங்களைப் பெறுவதற்கான கோரிக்கை இணங்க வேண்டும்
அவசரகாலங்களில் வரும் பயனர் விவரங்களைப் பெறுவதற்கான கோரிக்கைகள்
ஒரு நபருக்கு ஏற்படும் மரணத்தையோ கடுமையான உடல்ரீதியான தீங்கையோ தடுக்கலாம் என நாங்கள் நியாயமாக நம்பினால், அரசாங்க ஏஜென்சியிடம் அவரைப் பற்றிய விவரங்களை வழங்கக்கூடும் — உதாரணமாக வெடிகுண்டு மிரட்டல், பள்ளிகளில் நடக்கும் துப்பாக்கிச் சூடு, ஆட்கடத்தல் போன்றவை தொடர்பாகத் தேவைப்படும் பயனர் விவரங்களையும், தற்கொலைத் தடுப்பு, காணாமல் போன நபர்களைக் கண்டறிதல் போன்றவற்றுக்கான பயனர் விவரங்களையும் இந்த அடிப்படையில் நாங்கள் வழங்கக்கூடும். எனினும் இத்தகைய காரணங்களுக்கான கோரிக்கைகளும்கூட பொருந்தக்கூடிய அரசாங்க சட்டங்களுக்கும், எங்கள் கொள்கைகளுக்கும் இணங்க வேண்டும் என்பதை உறுதிசெய்து கொள்வோம்.